ஆளுநர் மற்றும் இராணுவம் இணைந்து 2ம் கட்ட மரநடுகை, சர்ச்சைகளுக்கு பின்னரும் நிகழ்வில் கலந்து கொண்டார் மாநகர முதல்வர்..

ஆசிரியர் - Editor I
ஆளுநர் மற்றும் இராணுவம் இணைந்து 2ம் கட்ட மரநடுகை, சர்ச்சைகளுக்கு பின்னரும் நிகழ்வில் கலந்து கொண்டார் மாநகர முதல்வர்..

மர நடுகை மாதத்தினை முன்னிட்டு மர நடுகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம் 2018.11.17 ஆம் திகதி வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் கௌரவ ரெஜினால்ட் குரே  தலைமையில் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட்  கலந்து சிறப்பித்தார்கள். செம்மணிப்பகுதியில் உத்தியோக பூர்வமாக மரங்கள் நடப்பட்டது.  இந்நிகழ்வில் வடக்குமாகாண அவைத்தலைவர் கௌரவ சீ.வீ.கே. சிவஞானம் , ஆளநரின் செயலாளர்  எல். இளங்கோவன் , 

வடக்குமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்குமாகாண திணைக்களங்களின் தலைவர்கள், யாழ் மாநகர பிரதி முதல்வர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதி ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர், யாழ் மாநகர உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் யாழ் மாநகர எல்லைக்குள் சுமார் 850 மரக்கன்றுகள் நாட்டல் நிகழ்வுகள் கௌரவ ஆளுநர் அவர்கள் மற்றும் கௌரவ மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் ஆகியோரது பிரசன்னத்தில் இடம்பெற்றமையும் இங்கு சிறப்பம்சமாகும். 

முதல்வர் அவர்களின் “சுத்தமான பசுமை மாநகரை நோக்கி” எனும் உயரிய நோக்கத்தின் ஓர் அங்கமாகவும் இந் நிகழ்வு அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

'

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு