யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் மாநகர முதல்வர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் மாநகர முதல்வர்..

நாவாந்துறை சாபிநகர், சூரியவெளி, நித்தியஒளி, வசந்தபுரம், புதிய சோனகதெரு 1ஆம் குறுக்கு பகுதி,  மற்றும் புதிய குடியிருப்பு அராலி வீதி ஆகிய பகுதியில் வெள்ளப் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டார் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்,

10ஆம், 11ஆம், 13ஆம்வட்டாரத்தில்  உள்ள மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளை அறிந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக கௌரவ முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் 

 நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (2018.11.16) அதி காலையிலேயே உடனடியாக குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் செய்து பார்வையிட்டதுடன் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார். குறித்த வட்டாரத்தின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களான  கௌரவ பாலச்சந்திரன், கௌரவ கே.எம். நிலாம்  மற்றும் எம்.எம்.எம். நிபாஹிர்  உள்ளிட்டோர்  இவ் நேரடி விஜயத்தில் 

கலந்துகெண்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கினார். பிரச்சினைகளை ஆராய்ந்த முதல்வர் அவர்கள் அப் பகுதி மக்களிடம் கருத்து வெளியிடும் போது தற்பொழுது மழைக்காலம் என்பதனால் பாரிய திட்டங்களை மேற்கொள்வது கடினமாகக் காணப்படும் என்றும், 

இனிவரும் காலங்களில் வெள்ளம் தேங்காது இருக்கக்கூடிய வகையில் குறித்த பகுதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான பொறிமுறையொன்று குறித்து மாநகரசபையின் ஊடாக ஆராய்வதாக ஆறுதல் கூறினார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு