யாழ்.மாநகரசபையின் கழிவகற்றும் தொட்டிக்குள் மனித மலத்தை கொட்டியமை தொடா்பில் விசனம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் கழிவகற்றும் தொட்டிக்குள் மனித மலத்தை கொட்டியமை தொடா்பில் விசனம்..

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள கழிவுகளை கொட்டுவதற்காக வைக்கப்பட்டு உள்ள தொட்டி ஒன்றினுள் உரைப்பையில் மனித மலத்தை கட்டி போட்டமை மாநகர சபை கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போதே உறுப்பினர்கள் கடும் விசனம் தெரிவித்தனர். 

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள பழைய பூங்கா பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு என வைக்கப்பட்டு இருந்த தொட்டிக்குள் மனித மல கழிவுகளை உரைபையில் கட்டி போட்டப்பட்டு உள்ளது. 

சுகாதார தொழிலாளர்கள் நேற்றைய தினம் கழிவகற்ற சென்ற போது கழிவுகளுடன் மல கழிவுகளும் கொண்டப்பட்டு இருந்தமையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அதில் தொடர்பில் உடனடியாக ஆணையாளருக்கு அறிவித்தனர். 

அதேவேளை குறித்த விடயம் நேற்றைய சபை கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதன் போது குறித்த செயலுக்கு உறுப்பினர்கள் விசனம் தெரிவித்தனர். கழிவகற்றும் தொழில் செய்பவர்களும் மனிதர்கள் தான் எனவே இவ்வாறன இழி செயல்களை யாரும் செய்ய கூடாது எனவும் , 

இவ்வாறன செயல்களை செய்வபவர்களை கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு