மகிந்த அரசு தோற்கடிப்பு! மஹிந்தவிற்கு எதிராக கையொப்பமிட்டோர் விபரம் இதோ

ஆசிரியர் - Admin
மகிந்த அரசு தோற்கடிப்பு! மஹிந்தவிற்கு எதிராக கையொப்பமிட்டோர் விபரம் இதோ

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 122 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். எனினும், இதனை மகிந்த ராஜபக்ச ஏற்க மறுத்து வருகிறது.

உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. இன்போது, ஜேவிபி சார்பில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. அதனை வாக்கெடுப்புக்கு விட சபாநாயகர் உத்தரவிட்டார். 

அதற்கு மகிந்த அணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதனால் பதற்ற நிலை ஏற்பட்டது. எனினும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுக் கொண்டிருக்க மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரச தரப்பினர் அவையில் இருந்து வெளியேறினர்.

அதன் பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்து விட்டு அடுத்து சபாநாயகர் கருஜயசூரிய நாளை காலை 10 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். ஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் பெரேரா லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோரும் இதனை உறுதி செய்தனர்

இந்நிலையில், நாளை கூடும் நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியென அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை கூடிய இலங்கை நாடாளுமன்ற அமர்வின்போது இடம்பெற்ற வாய்மொழி மூலமான வாக்கெடுப்பின் போது இது உறுதியானது என தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் என கூறினார்.

இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை யாராவது எதிர்க்க விரும்பினால் நாளை அவர்கள் அதனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க நாங்கள் நாளையும் தோற்கடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே 122 நாடாளுமன்ற உறுப்பினர்களி்ன் கையெழுத்துகள் அடங்கிய, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு