பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வவுனியா மாணவி ஓடும் ரயிலில் இருந்து பாய்ந்து தற்கொலை, பல கோணங்களில் பொலிஸாா் விசாரணை..

ஆசிரியர் - Editor I
பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வவுனியா மாணவி ஓடும் ரயிலில் இருந்து பாய்ந்து தற்கொலை, பல கோணங்களில் பொலிஸாா் விசாரணை..

பேராதனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஓடும் புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என சந்தேசிக்கப்படுகின்றது.

 கண்டியிலிருந்து (12) காலை 5.15 மணியளவில் கொழும்பை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த ரெயிலில் பாய்ந்தே இம் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. 

'பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவின் கல்வி பயிலும் மதுஷா செல்வநாயகம் (21) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பேராதனை கறுப்புப் பாலம் (கலுப்பாலம்) என்று அழைக்கப்படும் மகாவலிக்கு குறுக்கான புகையிரதப் பாதை அருகே இம் மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பேராதனை பல்கலைக்கழக வளாகத்தை ஊடறுத்துச் செல்லும் புகையிரதப் பாதையாகும். தனது தந்தை இறந்துள்ளதாகவும் அச் செய்தி கேள்விப்பட்டு தமது வீட்டுக்கு செல்வதாக தெரிவித்து அவர் தங்கும் ராமநாதன் 

விடுதியிலிருந்து வெளியேறிதாக பல்கலைக்கழக வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இம் மாணவி வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவருகிறது. 

இவரது குடும்பத்தில் மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனதாகவும் தனது குடும்பத்தில் கடைசிப்பிள்ளையான இவருக்கு இரண்டு அக்காமாரும் ஒரு அண்ணனும் இருக்கும் நிலையில் தந்தை ஒரு விவசாயி என்றும் தெரிய வருகிறது.

மேலும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த கல்தேர தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு