நாடாளுமன்றம் கலைப்பை கண்டித்து பல அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்லவுள்ளன..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றம் கலைப்பை கண்டித்து பல அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்லவுள்ளன..

நாடாளுமன்றை ஜனாதிபதி  கலைத்தமையானது  அரசியல் அமைப்பின்   19ம் திருத்தச் சட்டத்தை மீறும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஐ.தே.கட்சி , ஜே.வி.பி. முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் தனித் தனியாக நாளைய தினம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

அரசியலமைப்பின் 19ம் திருத்தச் சட்டமானது நாடாளுமன்றை ஜனாதிபதி சுயமாக கலைப்பதானால் 4 ஆண்டுகளும் 6 மாதங்களிற்கு முன்பு கலைக்க முடியாது. என 70வது சரத்து கூறுகின்ற நிலையில் ஜனாதிபதி ஏதேச்சையாக நாடாளுமன்றைக் கலைத்து அரச இதழ் அறிவித்தல் வெளியிட்டமை சட்டவிரோதமானது.

எனவே ஜனாதிபதியினால் 9ம் திகதி நள்ளிரவு வெளியிட்ட அரசிதழை செல்லுபடியற்றது. எனத் தீர்ப்பிடக்கோரி பல கட்சிகளின் தலைவர்களும் நாளைய தினம் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்.

இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் அடுத்த கட்ட நடவடிக்கையினை அடுத்தே  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான இறுதி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம் நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரை சந்தித்து கலந்துரைநாடியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு