யாழ்.மாநகரசபை எல்லைக்குள் 17 இடங்களில் smart lamp pole மற்றும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் 17 இடங்களில் smart lamp pole மற்றும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை..

யாழ்.மாநகர எல்லைக்குள் 17 இடங்களில் smart lamp pole அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கட்டமாக யாழ்.நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேருந்துச் சேவைகள் இடம்பெறும் இடத்தில்) மாதிரி smart lamp pole ஒன்றை e.co , (edotco Group) நிறுவனம் அமைத்துள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் e.co நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் இணைந்து திங்கட்கிழமை (05) மாலை 7 மணியளவில் திறந்து வைத்தனர்.

இச் சேவைக்காக அனுமதியை மாநகரசபையிடம் கோரியிருந்த நிலையில் அதன் சாதக பாதக நிலைமைகளை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே முதற்கட்டமாக இது அமைக்கப்பட்டது.

இம் மாதிரியை உதாரணமாகக் கொண்டு மாநகர எல்லைக்குள் smart lamp pole அமைப்பதற்காக 17 முக்கிய இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநகர முதல்வரின் கோரிக்கைக்கு அமைய இந் நிறுவனத்தின் இத் திட்டத்தில் முதல் முறையாக இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே smart lamp pole இல் 3 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், 

கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு