யாழ்.மாவட்ட கட்டளை தளபதிக்கு கௌரவ பட்டம்..

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்ட கட்டளை தளபதிக்கு கௌரவ பட்டம்..

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வறுமைப்பட்ட மக்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டுள்ளது. 

யாழ்மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஜக்கிய தேசிய சுதந்திரமுண்ணணியின் தலைவர் வைத்தியர் கிருசாந் இராஜசுந்தரம்; கலந்து கொண்டிருந்தார். 

இதன்போது  யாழ்மாவட்ட கட்டளைத்தளபதியின் சேவையினை பாரட்டி அவருக்கு, தேசிய மானிய, தேசபந்து, லங்காபுத்திர, மானகித்தவாதி என கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், 

இராணுவ உயர்நிலை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்  வில் 25 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும், 50முதியவர்களுக்கு கண்புரைசத்திரசிகிச்சைக்கு உரிய உதவியும், 

தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைகளுக்கு தீபாவளி உடுபுடவைகளும் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கிருசாந் இராஜசுந்தரம் உரையாற்றுகையில், ரீ.என்.ஏ என்ன செய்தது இந்த மூன்று வருடத்தில். 

சுமந்திரன் ஜனாதிபதியினை ஏசுறார் நீ,நான் என்று, இவங்க என்ன செய்யவேண்டும் நல்ல சந்தர்பம் வந்திருக்கு. இடம்பிரச்சிணை, காணிப்பிரச்சிணை. நாடு கேட்கமுடியாது. சாதரண பிரச்சிணை கேட்கலாம். 

அங்கை போறதைவிட இங்கை வாறத விட நடுநிலையாக நின்று அல்லது மகிந்த இராஜபக்ச ரணிலிடம் கேட்கலாம் மக்களுடைய பிரச்சிணையினை தீhக்க சொல்லி. நூன் சுமந்திரணை கண்டிக்கிறேன். ஜனாதிபதியினை ஏசுறார். 

ஆவர் ஜனாதிபதியினை ஏச அவர் யார்,?அப்படி ஜனாதிபதி என செய்துவிட்டார்?  இவங்க செய்த பிழை தெரியுமா? உலகில் இல்லாத எதிர்கட்சி ஒன்று இங்கு உள்ளது. எதிர்கட்சி என்பது மக்களுடைய பிரச்சிணையை பேசவேண்டும். 

ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியில் சூறை ஆடிய போது, அவருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்துட்டு வந்தாங்க. இவங்களை நாங்கள் காரசாரமாக பேசினா என்னவாகும்? 

பிழையான வேலை செய்திருக்காங்க.. சுகாதார பிரச்சினைகள், கிட்னி பாதிப்பு பிரச்சினைகள், மக்களுடைய பொருளாதார பிரச்சினைகள் என பல பிரச்சினைகளுக்கான தீர்வினை இன்று இராணுவம் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. 

இவர்கள் ஜெனீவாவுக்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள். ஜெனீவா யார்? அவர்களுக்கு இங்கு என்ன வேலை? என கேள்வி எழுப்பினார்.  

Radio
×