தீபாவளி தினத்தில் 18 பவுண் நகைகள் கொள்ளை..

ஆசிரியர் - Editor
தீபாவளி தினத்தில் 18 பவுண் நகைகள் கொள்ளை..

யாழில். தீபாவளி தினத்தன்று ஆலயங்களிற்கு வழிபாட்டு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. 

கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 பவுண் தாலிக் கொடியினை அறுத்துக்கொணடு வேகமாகத் தப்பியோடியுள்ளனர்.

அது தொடர்பில் தாலிக்கொடியை பறிகொடுத்தவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார். 

அதேவேளை திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் 3 பவுண் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். 

அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதவேளை கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு வழிப்பாட்டுக்கு சென்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி வீழ்த்தி விட்டு 2 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 

அது குறித்தும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

Radio
×