புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி கற்ற பாடசாலைக்கு ஏற்பட்ட நிலை! நிரந்தரமாக மூட உத்தரவு !
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி கற்றதாக கூறப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக அம்பாறை வலயக்கல்வி பணிப்பாளரான விமலசேன மத்தும ஆராச்சி தெரிவித்துள்ளார்.
1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் தற்போது மாணவர்கள் எவரும் கல்வி கற்பதில்லை. இங்கு ஒரு அதிபரும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிக்கின்றனர்.
குறித்த பாடசாலையின் கட்டடங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இப்பாடசாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி கற்றுள்ளதை ஆவணங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, 1960ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட இனமுரண்பாடுகளால் அம்பாறை நகரில் இருந்து தமிழர்கள் வெளியேறிய காரணத்தினாலேயே தற்போது இந்த பாடசாலை மூடப்படும் நிலைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.