SuperTopAds

அமெரிக்காவில் நடைபெற்ற 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றி!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற 2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி  வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி  செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

செனட் சபையில் ஜனநாயகக் கட்சி 52 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.குடியரசுக் கட்சி 40 இடங்களைப் பெற்றுள்ளது.

பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சி 191 இடங்களையும், குடியரசுக் கட்சி 110 இடங்களையும் பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

டெக்சாஸ், கன்சாஸ், ஓஹியோ, தென் கரோலினா போன்ற குடியரசுக் கட்சியின் வலுவான மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் முடிவுகள் குறித்து சமூக ஊடகத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார் "நான் தேர்தலில் போட்டியிடவில்லை.

போட்டியிட்டிருந்தால் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்போம்" என்று கூறியுள்ளார். மேலும், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு சில கட்சித் தலைவர்களும் Fox News தொலைக்காட்சியும் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட டெக்சாஸில் ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஜினா ஹினோஜோசா அந்த மாநிலத்தின் முதல் லத்தீனா பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளையும் கட்டுப்படுத்துவதால் டிரம்பின் சட்டமியற்றும் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரிக்கும்.

ட்ரம்ப் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மீது காங்கிரஸ் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள முடியும்.

குடியரசுக் கட்சியின் அரசியல் செல்வாக்கு பலவீனமடையலாம். - அத்துடன் ட்ரம்பின் மீதமுள்ள பதவிக்காலம் அரசியல் ரீதியாக சவாலானதாக மாறலாம்.

மொத்தத்தில் 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் டொனால்ட் ட்ரம்புக்கும் குடியரசுக் கட்சிக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமைந்துள்ளன.

அமெரிக்க வாக்காளர்கள் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

000

Radio