யாழ்.பல்கலை இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைககு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தகைமையுடைய ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்காக 08 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர் உயர்மட்டப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரையின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான நிறுவனமொன்றிற்கு
2,025.73 மில்லியன் ரூபாய் தொகைக்கு (பெறுமதி சேர் வரி நீங்கலாக) குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரிய சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




