SuperTopAds

காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தில் 131 மில்லியன் ரூபாய் நிதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

ஆசிரியர் - Editor II
காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தில் 131 மில்லியன் ரூபாய் நிதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு 131 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான விலைமனுக் கோரல் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி. மதிவதனி தலைமையில் மாநகர சபையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

காக்கைதீவு மீள்சுழற்சி மையத்தில் நீண்டகாலத் தேவையாகக் காணப்படும் கழிவுநீர் சுற்றிகரிப்பை பொறிமுறையை அமைப்பது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த திட்டத்திற்காக 131 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற மாநகர சபை அமர்வில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Radio