SuperTopAds

வவுனியாவில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் போதைப்பொருள் பாவிக்கவில்லை… மருத்துவ அறிக்கையில் நிரூபனம்….

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் போதைப்பொருள் பாவிக்கவில்லை… மருத்துவ அறிக்கையில் நிரூபனம்….

வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

இருப்பினும் அதனை மறுத்த இளைஞன் பொலிசாருடன் முரன்பட்டிருந்ததுடன் பொலிசார் தன்னை தாக்கியதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞனை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர், 

வவுனியா பொது மருத்துவமனையில் பெறப்பட்ட அவரது மருத்துவ அறிக்கையும் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவரது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் எந்தவிதமான போதைப்பொருளும் பயன்படுத்தியிருக்கவில்லை என மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் அவரது உடலில் அடிகாயங்கள் இருப்பதும் மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இவை தொடர்பாக கருத்தில் எடுத்த நீதவான் குறித்த இளைஞரை பிணையில் விடுவித்திருந்ததுடன். 

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரின் செயற்ப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். 

உரிய விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்

Radio