ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையளரை பதவி விலக வலியுறுத்தி எதிர்ப்புப் பேரணி!

இந்திய தேர்தல் ஆணையகத்தின் தலைவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட எதிர்ப்புப் பேரணியை முன்னிட்டு புதுடெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கூட்டணி (INDIA) தலைவர்களின் பங்கேற்புடன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தப் போராட்டப் பேரணி (01) நடைபெறவுள்ளது.
போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ராம்லீலா மைதானப் பகுதியில், தடிகளுடனும் பாதுகாப்புக் கேடயங்களுடனும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, கலவரத் தடுப்பு ஊர்திகளும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் வாக்காளர் பட்டியலை மறுசீரமைப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பதோடு, இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.




