திமுகவின் நிலைப்பாடு தொடர்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலாளர் விமர்சனம்!

தமிழக அரசியலில் திமுகவின் நிலைப்பாடு தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவளிக்குமா எனக் கேட்கப்பட்டபோது, “தேர்தல் வரட்டும், பார்க்கலாம்” எனப் பதிலளித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தெளிவான பதிலை வழங்காமல் இவ்வாறு கூறியிருப்பது கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் தனுஷுக்காகக் காத்திருப்பதாகவும், திமுக தலைவர் சீமானுக்காகக் காத்திருப்பதாகவும் விமர்சித்துள்ள அவர், அரசியல் இலாபத்திற்காக அதிமுகவுடன் திமுக கொண்டிருந்ததாகக் கூறப்படும் இரகசியத் தொடர்பு தற்போது வெளிப்படுவதைப் போல, நாம் தமிழர் கட்சியுடனான திமுகவின் கரிசனமும் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் பாஜகவுடனான திமுகவின் திரைமறைவு அரசியல் தொடர்புகளும் அம்பலமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமிழகத்தில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் ஆட்சியை விமர்சனங்களால் அசைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




