SuperTopAds

வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை கோரும் நபர்களுக்கு அரசு வேலை இல்லை - உத்தர பிரதேச முதல்வர்!

ஆசிரியர் - Editor IV
வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை கோரும் நபர்களுக்கு அரசு வேலை இல்லை - உத்தர பிரதேச முதல்வர்!

வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை கோரும் நபர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்குவது நிறுத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய போராட்டங்களில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சிலர் கோஷமிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான், உத்தர பிரதேச அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அரசுக்கு எதிராக ஆட்சி மாற்றம் கோருவோருக்கு கடிவாளம் போடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளனர்.

தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி ஆட்சி மாற்றம் கோரி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தான் உத்தர பிரதேச அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Radio