SuperTopAds

மன்னாரில் தொடரும் மழை - 50 குடும்பங்களை சேர்ந்த 122 பேர் பாதிப்பு.

ஆசிரியர் - Editor II
மன்னாரில் தொடரும் மழை - 50 குடும்பங்களை சேர்ந்த 122 பேர் பாதிப்பு.

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த 122 பேர் இலுப்பக்கடவை தமிழ் கலவன் பாடசாலையில்  தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்

 மன்னார் மாவட்டத்தின் கூராய் மற்றும்  சீதுவை விநாயகர் குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கலே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெய்து வரும் அடை மழை  தொடருமானால் மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Radio