SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1 லட்சம் மக்கள் வாழும் நிலையில் 15516 வாகனங்களே உள்ளதாம்..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1 லட்சம் மக்கள் வாழும் நிலையில் 15516 வாகனங்களே உள்ளதாம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது ஒரு லட்சம் மக்கள் வாழும் நிலையில் இன்றுவரை 14 ஆயிரத்து 732 மோட்டார் சைக்கிள்களும் 784 முச்சக்கர வண்டிகளுமே அந்த மாவட்டத்தின் பதிவில் உள்ளது.

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் குறைந்த மாவட்டமாக காணப்படும் நிலையில் அந்த மாவட்டத்தின் நிலப்பரப்பு விஸ்தீரணத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான போக்குவரத்து வசதிகள் கிடையாது.

என அந்த மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக கருத்து  தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த மாவட்டத்தில் பதிவில் உள்ள சகல வகை வாகனங்களின் விபரங்களையும் பிரதேச செயலகங்களில் 2017ம் ஆண்டிற்கான வரி செலுத்தியதன் அடிப்படையில் பெறப்பட்டது. 

இவற்றின் அடிப்படையில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினில் 5 ஆயிரத்து 425 மோட்டார் சைக்கிள்களும் , 67 மகிழ்ஊர்ந்து, 95 வான்களும் , 345 முச்சக்கர வண்டிகளும் , 71 பார ஊர்திகளும் உள்ளதோடு 26 பேரூந்துகளும் பதிவில் உள்ளன. 

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவினில் 2 ஆயிரத்து 280  மோட்டார் சைக்கிள்களும் , 5 மகிழ்ஊர்ந்து, 76 வான்களும் , உள்ளதோடு 14  பேரூந்துகளும் பதிவில் உள்ளன.

அதேநேரம் மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 111 மோட்டார் சைக்கிள்களும் , 14 முச்சக்கர வண்டிகளும் , 44 பேரூந்துகளும் பதிவில் உள்ளன. 

இவ்வாறே புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவினில் 4 ஆயிரத்து 184  மோட்டார் சைக்கிள்களும் , 31 மகிழ்ஊர்ந்து, 20  வான் என்பவற்றுடன் , 315 முச்சக்கர வண்டிகளும்  உள்ளதோடு 44 பேரூந்துகளிற்கும்  பிரதேச செயலகத்தில் வரி செலுத்தப்பட்டுள்ளது. 

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 854 மோட்டார் சைக்கிள்களும் , 6 மகிழ்ஊர்ந்து, 9  வான்களும் , 110 முச்சக்கர வண்டிகளும் , 34  பார ஊர்திகளும் உள்ள அதேசமயம் 3  பேரூந்துகளும் பதிவில் உள்ளதாக வரி செலுத்தப்பட்டுள்ளதுடன். 

வெலிஓயாவில் 888 மோட்டார் சைக்கிளும் , 10 மகிழூர்ந்து , 10 வான் உன்பவற்றிற்கும் ஆண்டுதோறும் வரி செலுத்தப்படுகின்றது. 

இதன் அடிப்படையிலேயே மாவட்டத்தின் முகவரியை உடைய  பதிவின் பிரகாரம் 14 ஆயிரத்து 732 மோட்டார் சைக்கிள்களும் 784 முச்சக்கர வண்டிகள் , 119 கார் , 210 வான் ஆகியவற்றுடன் 87 பேரூந்துகளும் 105 பார ஊர்திகளும் பதிவில் உள்ள அதேநேரம் 

ஏனைய மாவட்டப் பதிவில் இருந்து உரிமம் மாற்றம் குறிப்பிட்டளவு வாகனங்களும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.