ஒதியமலை படுகொலை நடந்த இடத்தில் தூபி அமைக்க பொலிஸார் தடை..
முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க ஒட்டுசுட்டான் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ஒதியமலையில் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி 33 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக படுகொலை இடம்பெற்ற பகுதியில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெறவிருந்தது.
அந்நிலையில் நினைவு தூபி அமைக்க அனுமதிக்க முடியாது எனவும், தூபி அமைப்பதற்காக பெற்றுக் கொண்ட அனுமதி பத்திரம் உள்ளடங்கலாக உரிய
ஆவணங்களை எம்மிடம் சமர்ப்பித்த பின்னர் தூபி அமைக்க நடவடிக்கை எடுங்கள் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.