பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு, போதை மாத்திரைகளை கடத்திய கும்பல் கைது..

ஆசிரியர் - Editor
பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு, போதை மாத்திரைகளை கடத்திய கும்பல் கைது..

வவுனியா- ஓமந்தை பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகள் அடங்கிய பொதி ஒன்றினை நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஓமந்தை பொலிஸார் மீ ட்டுள்ளனர்.

கஞ்சா, ஹெரோயின் என்­பன பொதி செய்­யப்­பட்ட நிலை­யில் கடந்த காலங்­க­ளில் மீட்­கப்­பட்­டி­ ருந்த நிலை­யில் தற்­போது போதைக் குளி­சை­க­ளும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

வன்­னிப் பிராந்­திய பிர­திப் பொலிஸ்மா அதி­பர் அப­ய­விக்­கி­ர­ம­வின் கீழ் இயங்­கும், ஓமந்­தைப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி சுரேஸ் சில்வா தலை­மை­யில் உப பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சன்­னஸ்­க­

ல­வின் வழி­காட்­ட­லில், திசா­நா­யக, நிசாந்­தன், பிர­சன்னா, விக்­கி­ர­ம­சிங்க, தர்­ம­தாச ஆகி­யோரை உள்­ள­டக்­கிய பொலிஸ் குழு, போதை மாத்­தி­ரை­களை கைப்­பற்­றி­யது.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து திரு­கோ­ண­மலை நோக்­கிப் பய­ணித்த தனி­யார் பேருந்தை ஓமந்தை நகர்ப் பகு­தி­யில் பொலி­ஸார் திடீ­ரென வழி­ம­றித்­துச் சோதனை மேற்­கொண்­ட­னர்.

இதன்­போது ஆயி­ரத்து 670 போதை மாத்­தி­ரை­க­ளு­டன் திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்த இரு இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

Radio
×