திருக்கேதீச்சரம் பகுதியில் இராணுவத்திடம் இருந்த 5 ஏக்கர் காணி கையளிப்பு..

ஆசிரியர் - Editor
திருக்கேதீச்சரம் பகுதியில் இராணுவத்திடம் இருந்த 5 ஏக்கர் காணி கையளிப்பு..

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள், மன்னார் பிரதேச செயலாளரிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி, மற்றும் வைத்திய சாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.

Radio
×