நீதிமன்றத்திற்கு அருகிலேயே ஹெரோயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞன்..

ஆசிரியர் - Editor
நீதிமன்றத்திற்கு அருகிலேயே ஹெரோயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞன்..

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக மல்லாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது , சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து பொலிஸார் குறித்த நபரை விரட்டி சென்று கைது செய்து சோதனையிட்ட போது அவரது ஆடையில் இருந்து 665 மில்லிகிராம் போதை பொருளை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த நபரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அங்கு தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio
×