12 ஆண்டுக் காதல் - காதலி உயிரிழந்ததால் காதலன் உயிர்மாய்க்க முயற்சி

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 26 வயதான இளம் பெண் உயிரிழந்த நிலையில், அவரது காதலன் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெட்டஹெத்த, போபத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சனி செவ்வந்தி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய அப்பெண்ணின் காதலனான 28 வயதுடைய இளைஞன் உயிர்மாய்க்க முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவர்கள் இருவரும் பாடசாலைப் பருவத்திலிருந்து சுமார் 12 ஆண்டுகளாகக் காதல் தொடர்பில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை எஹலியகொடையிலிருந்து பரக்கடுவ நோக்கிப் பயணித்தபோது, அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது இளம் பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது காதலி உயிரிழந்ததை அறிந்து, உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




