புதிதாக பதவியேற்ற 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி யாழ்.மாவட்ட செயலரை சந்தித்தார்

புதிதாக பதவியேற்ற 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் WMPWNDB வீரக்கோன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, உள்ளிட்டவர்களுடன் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.








