SuperTopAds

புகையிரத பாதையில் மண்மேடு சரிவு; பேராதனை- கொழும்பு கடுகதி புகையிரதம் தடம் புரள்வு!

ஆசிரியர் - Editor II
புகையிரத பாதையில் மண்மேடு சரிவு; பேராதனை- கொழும்பு கடுகதி புகையிரதம் தடம் புரள்வு!

பேராதனைச் சந்தியிலிருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கங்கொட மற்றும் கடிகமுவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக புகையிரத பாதையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையே புகையிரதம் தடம் புரளக் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Radio