புதுக்குடியிருப்பு பிரதேசசபை கிணற்றிலிருந்து எறிகணைகள் மீட்பு..
புதுக்குடியிருப்பு பிரதேசசபை கிணற்றுக்குள் இருந் து போர்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எறிகணைக ள் மீட்கப்பட்டிருக்கின்றது.
சுமார் 50 அடிகள் ஆழம் கொண்ட இந்தக் கிணற்றில் இருந்து மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. தற்போதுள்ள வறட்சியால் கிணற்றின் நீர் வற்றியுள்ளது.
அதையடுத்து நேற்று கிணற்றைத் துப்புரவாக்கும் நடவடிக்கைகள் பிரதேச சபைப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
கிணற்றில் இருந்த நீர் முற்றாக இறைக்கப்பட்டு மண் அகழப்பட்டது. அப்போது 5 எறிகணைகள் தென்பட்டுள்ளன.
துப்புரப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுப் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் இ தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.
புதுக்குடியிருப்புப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். எறிகணைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.