மின்சாரத்தை துண்டிக்காமல் சீரமைப்பு பணி; ஊழியர் உயிரிழப்பு

கம்பஹா - கடவத்தை பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு மின்சார ஊழியர்கள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதில் ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




