AI மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் சூழலில் AI - அவசரமாக கூடும் அறிவியலாளர்கள்!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அதனை அவசரமாகக் கட்டுப்படுத்துவது அல்லது நிறுத்துவது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
அந்த வகையில், AI அமைப்பு எதிர்பாராத அல்லது ஆபத்தான வகையில் செயல்படும் சந்தர்ப்பங்களில், அதன் செயல்பாட்டை அவசரமாக நிறுத்துவதற்கான ‘AI கில் ஸ்விட்ச்’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், AI அமைப்புகள் ஒரே கணினியில் மாத்திரம் இயங்குவதில்லை. பல்வேறு தரவு மையங்கள், சேவையகங்கள், கணினிச் சில்லுகள் மற்றும் காப்பு அமைப்புகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளில் அவை செயல்படுவதால், ஒரே பொத்தானை அழுத்தி அவற்றை முழுமையாகச் செயலிழக்கச் செய்வது நடைமுறையில் சிக்கலானதாக இருக்கலாம்.
அத்துடன், AI அமைப்புக்குள் அவசர நிறுத்த வசதியை உருவாக்குவது தொடர்பிலும் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த வசதி தவறாகப் பயன்படுத்தப்படுவது அல்லது இணையத் தாக்குதல்களுக்கு இலக்காவது போன்ற அபாயங்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
இதனால், AI பாதுகாப்புக்கு ஒரே ஒரு ‘கில் ஸ்விட்ச்’ போதுமானதாக இருக்காது எனவும், பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு நடைமுறைகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
AI அமைப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு, நிபுணர்களின் பாதுகாப்புச் சோதனைகள், ஆபத்தான செயல்பாடுகளை அடையாளம் காணும் நடைமுறைகள் மற்றும் அவசரகால செயலிழப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், AI மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை.
எனினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் அதனைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் உருவாக்க வேண்டிய தேவை குறித்து அரசுகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.




