SuperTopAds

ஆசிய விளையாட்டு போட்டி; பிறந்தநாளில் தங்க வென்ற இந்தியாவின் லவ்லினா

ஆசிரியர் - Editor I
ஆசிய விளையாட்டு போட்டி; பிறந்தநாளில் தங்க வென்ற இந்தியாவின் லவ்லினா

ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவின் லவ்லினா தனது பிறந்தநாளான இன்று குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன்(lovlina borgohain), சீன வீராங்கனை பவ் ஜியியை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வீழ்த்தி தங்கம் வென்றார். 

2014 ஆம் ஆண்டில் மேரி கோமிற்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை லவ்லினா பெற்றுள்ளார். 

அக்டோபர் 2 ஆம் திகதியான இன்று, தனது 29 வது பிறந்தநாளை கொண்டாடும் லவ்லினா போர்கோஹைன் பிறந்தநாளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Radio