மன்னார் மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அடிக்கல் நாட்டு

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளின் அடிக்கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.








