SuperTopAds

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor II
கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி விழாவோடை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -  கார் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தையடுத்து, கார்  சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Radio