SuperTopAds

200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் நீதிமன்ற உத்தரவில் அழிப்பு

ஆசிரியர் - Editor II
200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் நீதிமன்ற உத்தரவில் அழிப்பு

டைனமைட் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி, பிடிக்கப்பட்ட  200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார் 

கைப்பற்றப்பட்ட  மீன் தொகுதி தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் இணைந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த மீன் தொகுதி மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அதனை மனித நுகர்வுக்கு பயன்படுத்தாமல் அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதி நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளது.

Radio