43 பந்தில் 111 ரன் விளாசிய ஹெட்மையர்! 16 ஓவர்களில் 185 ஓட்டங்கள்..நொறுங்கிய பூரனின் அணி

கரீபியன் லீக் போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடி சதம் விளாசினார்.
ஷிம்ரான் ஹெட்மையர் சதம் விளாச, கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கரீபியன் லீக் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மோதின.
முதலில் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில், தொடக்க வீரர்கள் சொதப்ப ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) ருத்ரதாண்டவம் ஆடினார்.
ரோமாரியோ ஷெப்பர்ட் அவருடன் கைகோர்க்க, கயானா அணி 16 ஓவர்களில் 185 ஓட்டங்கள் குவித்தது.
ஷிம்ரான் ஹெட்மையர் 43 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் விளாசினார். ஷெப்பர்ட் 7 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அலெக்ஸ் ஹால்ஸ் 55 (24), நிக்கோலஸ் பூரன் 43 (16) ஓட்டங்களும் எடுத்தனர்.




