இந்தியாவில் CNG குழாய் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவில் உள்ள கோல்முரி பெட்ரோல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெட்ரோல் நிலையத்தில் வாகனமொன்றுக்கு CNG எரிவாயு நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென CNG குழாய் கழன்று அதன் முனைப்பகுதி அருகில் நின்றுகொண்டிருந்த நபரின் தலையில் பலமாக மோதியுள்ளது.
குழாயின் முனைப்பகுதி தலையில் பலமாக தாக்கியதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், CNG நிரப்பும் நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




