SuperTopAds

நல்லூர் ஆலய சூழலில் ஏலம் விடப்பட்ட கடைகள்

ஆசிரியர் - Editor II
நல்லூர் ஆலய சூழலில் ஏலம் விடப்பட்ட கடைகள்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால் தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிழமை நடைபெற்றது.

மாநகர சபை கணக்காளர் செ.காண்டீபன் தலமையிலான மாநகர சபையின் ஏல குழுவினர் யாழ். மாநகர சபை பிரதி முதல்வரின் பிரசன்னத்துடன் ஏலம் விடப்பட்டன. அதன்போது பலர் ஆர்வத்துடன் பங்கேற்று தமக்கான கடைகளை பெற்றுக்கொண்டனர்.

திருவிழாவிற்கான தற்காலிக கடைகள் திருவிழாவின் ஆரம்பத்தில் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் பெற்றுக்கொள்ளப்படாத கடைகள் நேரில் இன்று ஏலம் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Radio