SuperTopAds

தமிழகத்தில் 'சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர நடவடிக்கை!

ஆசிரியர் - Editor IV
தமிழகத்தில் 'சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 12,921 முக்கிய இடங்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், தொடருந்து நிலையங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் 12,921 இடங்கள் அடையாளம் காணப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பெண் காவலர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுத்தல், மற்றும் அவசர காலங்களில் உடனடி உதவி வழங்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தப் படை செயல்படுகிறது.

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio