SuperTopAds

யார் காணாமல் போகச் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

ஆசிரியர் - Editor IV
யார் காணாமல் போகச் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போன உறவுகளின் வலியையும் வேதனையையும் உணர்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பில் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றிருந்த சம்பவங்கள் வேதனையளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்விடையம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு அசர் மேலும் கூறுகையில் -

காணாமல் போனவர்களின் உறவுகள் நீண்டகாலமாக தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாத நிலையில், பல்வேறு துன்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த விடயத்தில் குற்றவாளிகள் யார் என்பதை அடையாளம் காண்பதுடன், அவர்களுக்கு பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

நானும் காணாமல் போனவர் உறவுகளைப் போன்று வலிதை உணர்ந்தவன் என்ற வகையில், காணாமல் போன உறவுகளின் உணர்வுகளையும் வலிகளையும் புரிந்துகொண்டு, அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பொறுப்பான தரப்புகள் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Radio