ஐரோப்பிய சம்மேளனம் - ஃபிஃபா உக்கிர மோதல் - மிரட்டும் UEFA!

ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டங்களுக்கு எதிராக யுஇஎஃப்ஏ (UEFA) அமைப்பு தனது கடுமையான எதிர்ப்பைத் தொடர்வதோடு, ஃபிஃபா தொடர்களைப் புறக்கணிக்கும் முடிவிலும் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை மற்றும் பிற தொடர்களில் தனியார் முதலீடுகளை அனுமதிக்கும் 'ஃபிஃபா ஃபார்வேர்ட் என்டர்பிரைஸ்' (FFE) திட்டத்திற்கு எதிராக UEFA அமைப்பின் 55 உறுப்பு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளன.
இன்ஃபான்டினோ தனது திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் மீண்டும் மேற்கொள்ளப்படாது என்பதற்கான உறுதியான உத்தரவாதமும், திருப்திகரமான விளக்கமும் அளிக்கப்படாததால் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என UEFA திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஜியானி இன்ஃபான்டினோவின் செயல்பாடுகள் மற்றும் தலைமையின் மீது ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ள அவநம்பிக்கை இன்னும் தீரவில்லை என UEFA தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5 அன்று போலந்தில் தொடங்கும் மகளிர் U-20 உலகக் கோப்பை தொடர் இந்த மோதலின் முதல் சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் உலக கால்பந்து அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




