SuperTopAds

மடுமாதாவின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ஆசிரியர் - Editor II
மடுமாதாவின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நேற்றைய தினம் கொடியேற்றப்பட்டது.

இதன் போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும் மறைமாவட்ட குருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.தொடர்ந்து நவநாள் திருப்பலி இடம் பெற்றது.

இந்த நிலையில்   நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்தில் கூடி வருகின்றனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் திருப்பலிகள்   தொடர்ந்து இடம்பெற்று எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Radio