'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' திறப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' இன்றைய தினம் வியாழக்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்பு கண்டுள்ளது.
இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாக ம்சென்ற அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்பு கண்டது.
யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.










