பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடும் FIFA தலைவர்!

உலகக் கோப்பை மற்றும் இதர கால்பந்து தொடர்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தால் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்துள்ள ஃபிபா (FIFA) தலைவர் கியானி இன்பான்டினோ தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் (Donald Trump) ஆதரவை நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பை வருவாயைத் தனியாருக்கு விற்கும் இன்பான்டினோவின் திட்டத்திற்கு யுஇஎஃப்சி (UEFA), ஆசிய மற்றும் வட அமெரிக்கக் கால்பந்து கூட்டமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் சர்ச்சைக்குரிய திட்டம் கைவிடப்பட்டது.
தனது தலைமைப் பதவிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும், எதிர்காலத் தேர்தல் ஆதரவைத் திரட்டவும் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை இன்பான்டினோ சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
பல தேசிய கால்பந்து சங்கங்கள் அவருக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ள நிலையில், இன்பான்டினோவின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான செல்வாக்கு கடும் சோதனையை எதிர்கொண்டுள்ளது.




