கர்னாடகாவில் கடும் மழை - காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது.
இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
ஆரம்பத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு தயக்கம் காட்டியிருந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மற்றும் கபினி அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், காவிரி நீர்வரத்து அதிகரித்ததை வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ஆதரவாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பல சமூக வலைதள பயனர்கள், இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் பல்வேறு பதிவுகள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர்.
"இயற்கையே முதலமைச்சர் பக்கம் நிற்கிறது", "கடவுளின் குழந்தை" போன்ற வாசகங்களுடன் பகிரப்படும் பதிவுகள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
எனினும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் மற்றும் பதிவுகள் அவற்றைப் பதிவிட்ட பயனர்களின் தனிப்பட்ட கருத்துகளாகும்.




