SuperTopAds

மன்னாரில் விபத்து - அருட்சகோதரிகளுக்கு காயம்

ஆசிரியர் - Editor II
மன்னாரில் விபத்து - அருட்சகோதரிகளுக்கு காயம்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் நேற்றைய  புதன்கிழமை பறைய நாளங்குளம் இரும்பு பாலத்தில் விபத்துக்குள்ளானது.

இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 4  அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்) காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச்  சேர்ந்த அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்) பயணித்த வாகனமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

விபத்து தொடர்பில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.