ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு உதவுகின்றன - அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்!

ஈரானுக்கும் ரஷ்யாவும் சீனாவும் இடையே "நிச்சயமாக ஒரு கூட்டணியும், அவ்வாறு செய்வதற்கான முயற்சிகளும்" உள்ளன என்று தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் அதைத் தடுப்பதற்கு வோஷிங்டனிடம் "பல வழிகள்" உள்ளன என்றும், அவற்றில் சில "இரகசியமாக வைக்கப்பட வேண்டும்" என்றும் ஹெக்ஸெத் குறிப்பிட்டார்.
ஈரான் செய்யும் சில செயல்களுக்கு ரஷ்யாவும் சீனாவும் வெவ்வேறு மட்டங்களில் துணை நிற்கின்றன என்றும் அவர் கூறினார்.
வான் சக்தியால் மட்டும் ஈரானைத் தோற்கடிக்க முடியுமா என்று கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னிடம் கேட்கப்பட்டது.
"வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வான் சக்திக்கு வரம்புகள் உண்டு, அவற்றை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.




