SuperTopAds

இந்தியாவில் ஒமிக்ரோன் வகை வைரஸின் புதிய பிறழ்வான 'RF.5' வகை கொரோனா வைரஸ் கண்டறிவு!

ஆசிரியர் - Editor IV
இந்தியாவில் ஒமிக்ரோன் வகை வைரஸின் புதிய பிறழ்வான 'RF.5' வகை கொரோனா வைரஸ் கண்டறிவு!

ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட நான்கு கொவிட்-19 மாதிரிகளின் ஜீனோம் பரிசோதனையில் ஒமிக்ரோன் வகை வைரஸின் புதிய பிறழ்வான 'RF.5' வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிறழ்வு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கொவிட்-19 அறிகுறிகள் தென்படும் பொதுமக்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன