SuperTopAds

கிரிக்கெற் ஜம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது 89 ஆவது வயதில் காலமானார்!

ஆசிரியர் - Editor IV
கிரிக்கெற் ஜம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது 89 ஆவது வயதில் காலமானார்!

மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவானும், உலகின் மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவருமான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது 89 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சர் கர்பீல்ட் சோபர்ஸின் மறைவை முன்னிட்டு, கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளின் வீரர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அத்துடன், இன்றைய போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடுவர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

1980 களின் முற்பகுதியில், 1983 உலகக் கிண்ணப் போட்டி உட்பட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டதன் மூலம், இலங்கையின் கிரிக்கெட் அணியுடன் அவர் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தார் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது இரங்கல் செய்தியில் நினைவுபடுத்தியுள்ளது.

கிரிக்கெட் உலகின் ஈடு இணையற்ற வீரராகவும், பயிற்றுவிப்பாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்திருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.