SuperTopAds

எதிர்வரும் 23 ஆம் திகதி திரைக்கு வரும் ஜனநாயகன் திரைப்படம்!

ஆசிரியர் - Editor IV
எதிர்வரும் 23 ஆம் திகதி திரைக்கு வரும் ஜனநாயகன் திரைப்படம்!

முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதித் திரைப்படம் என்பதால், இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் அதேவேளை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் என்ற ரீதியில், அதன் வெளியீட்டை ஒரு பிரம்மாண்டமான திருவிழாவைப் போலக் கொண்டாடுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அமைச்சர் என். ஆனந்த் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வழங்கியுள்ள அறிவுறுத்தலில், கட்சியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய தங்கள் பகுதிகளில் உள்ள திரையரங்குகளைச் சிறப்பாக அலங்கரிக்குமாறும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் திரைப்படத்தைக் காணும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து, வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.