SuperTopAds

வவுனியாவில் விபத்தில் சிக்கி பொலிஸ் சார்ஜெண்ட் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் விபத்தில் சிக்கி பொலிஸ் சார்ஜெண்ட் உயிரிழப்பு

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ,மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரி மோதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

பொலிஸ் உத்தியோகஸ்தரான விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் அமைத்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மோதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  ,