நடுவரை உலகக்கோப்பையை விட்டு விரட்டுங்கள் - FIFA விடம் எகிப்து அதிகாரப்பூர்வ புகார்!

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 நாக்-அவுட் சுற்றில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கணக்கில் எகிப்து அணி தோல்வியடைந்த சர்ச்சை, தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
மைதானத்தில் நடந்த தவறுகளுக்கு நடுவர்களின் "ஒருதலைப்பட்சமான" செயல்பாடே காரணம் என எகிப்து கால்பந்து சங்கம் (EFA) சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபாவிடம் (FIFA) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
எகிப்து கால்பந்து சங்கத் தலைவர் ஹானி அபோ ரிடா (Hany Abo Rida) இந்த முறையீட்டைச் சமர்ப்பித்துள்ளார்.
ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் எகிப்து அடித்த 2-வது முறையான கோலை (Mostafa Zico அடித்தது), அதற்கு முன்னதாக எகிப்து வீரர் மர்வான் அத்தியா ஃபவுல் செய்ததாகக் கூறி VAR மூலம் நடுவர் ரத்து செய்தார்.
ஆனால், ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அடித்த 3-வது வெற்றி கோலுக்கு முன்பாக பாக்ஸிற்குள் முகமது சாலா (Mohamed Salah) வீழ்த்தப்பட்ட போது, அதை நடுவர்கள் சோதிக்கக் கூட இல்லை என எகிப்து சாடியுள்ளது.
ஆட்டத்தின் போது எகிப்து வீரர்கள் இனவெறி அவதூறுக்கு ஆளானதாகப் பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் பிஃபாவின் புதிய கைகளை உயர்த்தும் "ஆண்டி-ரேசிசம்" சைகை (Anti-racism gesture) மூலம் நடுவரிடம் முறையிட்டும், பிரெஞ்சு நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் (François Letexier) போட்டியை நிறுத்தாமல் அலட்சியப்படுத்தியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் தங்களுக்கு இழைக்கப்பட்ட "பகிரங்க பாகுபாடு" என்று கூறியுள்ள எகிப்து நிர்வாகம், பிரெஞ்சு நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் மற்றும் அவரது முழு நடுவர் குழுவையும் இந்த உலகக்கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் இருந்து உடனடியாக நீக்க (Suspension) வேண்டும் என பிஃபாவை வலியுறுத்தியுள்ளது.
"நடுவர்களின் இத்தகைய மோசமான தவறுகளும், இரட்டை நிலைப்பாடுமே எகிப்தின் உலகக்கோப்பை கனவை சிதைத்துள்ளது. இதற்கு முறையான விசாரணை வேண்டும்."




